கொடூரம்... பெட்ரோல் பங்க் மேனேஜர் குத்தி கொலை... மர்ம நபர்கள் அட்டகாசம்.!brutality-in-maharashtra-petrol-station-manager-stabbed

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரில்  பெட்ரோல் பங்க் மேனேஜர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலையாளிகளை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கோபர்கான் தாலுகாவில் சன்வார் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் சில இளைஞர்கள் பெட்ரோல் போடுவதற்காக வந்துள்ளனர்.

India

அந்த இளைஞர்கள் பெற்றோர் பங்க் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக் கேட்கச் சென்ற பெட்ரோல் பங்க் மேனேஜர் போஜ்ராஜ் கங்காவை அந்த இளைஞர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை  அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.