ஒரு பெண்ணின் சுதந்திரத்தில் தலையிட புருஷன் யாரு? ஆணாதிக்க மருமகனுக்கு மாமனார் வைத்த குட்டு.. சிறப்பான சம்பவம்.!



Bride’s Father Calls Off Wedding After Groom Tries to Control Bride’s Freedom

மணமகன் செயலால் ஆத்திரமடைந்த தந்தை மகளின் திருமணத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

நிச்சயம்:

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மார்க்கபுரம், ரச்சாரலா மண்டலம், சின்னக்கணிப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கும், துரிமெல்லா கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: குட்டி குட்டி ஆடையுடன் ரீல்ஸ்..  மாமனார்-மாமியார் தாக்கிய மருமகள்.. மனமுடைந்து எடுத்த முடிவால் கண்ணீர் சோகம்.!

Trending

ஊர்வலம்:

திருமணத்துக்கு முந்தைய நாள் இரவில் மணமக்கள் ஊர்வலம் வந்தனர். இவர்களுடன் உறவினர்களும் இருந்தனர். அச்சமயம், உறவினர்கள் மணமக்களை நடனமாடச்சொல்ல, மணப்பெண் உறவினர்களின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்து ஆட வந்துள்ளார். 

Trending

மணமகன் கோபம்:

மணமகன் நடனமாட விருப்பம் இல்லாத நிலையில், மணப்பெண்ணும் ஆடக்கூடாது என கோபத்துடன் கூச்சலிட்டு இருக்கிறார். மணமகனின் ஆதிக்க எண்ணத்தை புரிந்துகொண்ட பெண்ணின் தந்தை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். மேலும், திருமணத்தை நிறுத்தி மகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின் இருதரப்பும் பேசி சமாதானம் ஏற்படாத நிலையில், திருமணம் நிறுத்தப்பட்டது. 

இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்.. 32 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை? நிர்வாணமாக சடலம் மீட்பு.!