குட்டி குட்டி ஆடையுடன் ரீல்ஸ்..  மாமனார்-மாமியார் தாக்கிய மருமகள்.. மனமுடைந்து எடுத்த முடிவால் கண்ணீர் சோகம்.!



Reels Videos Row Turns Tragic: Haryana Couple Dies by Suicide After Clash With Daughter-in-Law Over Social Media Posts

மாமனார்-மாமியார் எடுத்த விபரீத முடிவு குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காதல் திருமணம்:

ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் மாவட்டம், நாரா கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 46). இவரின் மனைவி சுமன் (வயது 44). தம்பதிகளுக்கு ஆஷிஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு சினேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சினேகா சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க: காதல் திருமணத்தால் கோபம்? மருமகனை காலி செய்த மாமனார்.. வன்மத்துடன் வெறிச்செயல்.!

Instagram

குட்டையான ஆடை:

இவர்கள் வசித்து வரும் கிராமத்தில் பழமையான கட்டுப்பாடுகள், பாரம்பரிய விஷயம் என நிபந்தனைகள் இருப்பதாக தெரிகிறது. சினேகா குட்டையான ஆடைகளை அணிந்து வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். அவை அதிக வரவேற்பை பெற்றுள்ளது. சினேகாவின் செயல்பாடுகளுக்கு மாமனார்-மாமியார் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இதனால் அவ்வப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

Instagram

தாக்குதல் சம்பவம்:

இதனிடையே, சம்பவத்தன்று மருமகள் & மாமனார்-மாமியார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சினேகா மாமனார்-மாமியாரை தாக்கி இருக்கிறார். இதனால் மனமுடைந்துபோன இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். மயங்கி கிடந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "என் பொண்டாட்டிய உன் மகன் கூட்டிட்டு போறான்" மகனின் கள்ளக்காதலால் தந்தை பலி.. கோவையில் ரணகொடூரம்..!