இந்தியா

அதிகாலையில் திடீரென வெடித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு! பெரும் பரபரப்பு!

Summary:

bomb blast in manipur

மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரமான இம்பால் நகரின் மேற்கே நாகமாபால் ரிம்ஸ் சாலை பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

ஆனால் அப்பகுதியில் வெடிகுண்டு வைத்தவர்கள் யார் என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை. அங்கு வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்தோர் மற்றும் பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் இதேபோன்ற சம்பவம் அதிகாலையில் மணிப்பூர் மாநில தலைநகரில் உள்ள நகர காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட நகரி டுகான் பரேங்கில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement