இந்தியா

மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க ஆதரவு..அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உறுதி..!

Summary:

மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க ஆதரவு..அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உறுதி..!

மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க ஆதரவு அளிக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் மொத்தம்  6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கட்சிகள் பெற்றுள்ள எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை அடிப்படையில், கட்சிகளோ அல்லது கூட்டணியோ அவைகளுக்கான பிரதிநிதிதுவத்தை இதன் மூலம் பெறமுடியம். எண்ணிக்கைகளின் அடிப்படையில் தி.மு.க கூட்டணி 4 உறுப்பினர்களையும், அ.தி.மு.க 2 உறுப்பினர்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24 ஆம் தேதி முதல்  31 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். இதற்கிடைய, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும்  தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.

அவற்றில், 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கான 4 இடங்களில், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற 3 இடங்களில் தி.மு.க வேட்பாளர்களான சு.கல்யாணசுந்திரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும்  இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க ஆதரவு அளிக்கும் என அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில் பா.ஜக. மாநில தலைவர் அண்ணாமலையை அ.தி.மு.க நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது.

கோரிக்கை கடிதத்தை பெற்றுக் கொண்டு பா.ஜ.க மாநிலங்களை தேர்தலி. அ.தி.மு.க-வை ஆதரிக்கும் என்று அண்ணாமலை தெரிவித்ததாக வைத்திலிங்கம் கூறியுள்ளார். இதற்கிடையே அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலை தேர்வு செய்ய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Advertisement