முதல்வருடன் செல்பி எடுத்து போட்டோ பதிவிட்ட பாஜக நிர்வாகி 6 ஆண்டு சஸ்பெண்ட்... பாஜக தலைமை அதிரடி.!



BJP Supporter Suspend form Party 6 Years

மாநில முதல்வரோடு மரியாதை நிமித்தமாக புகைப்படம் எடுத்து பதிவிட்ட பாஜக நிர்வாகி அக்கட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பாஜக தலைவர் கிஷான்ஸின் சோலாங்கி. இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வரை பாஜகவின் செய்தி தொடர்பாளாக பொறுப்பில் இருந்தார். 

நேற்று முன்தினத்தில் கிஷான்ஸின் தனது முகநூல் பக்கத்தில் ஆம் ஆத்மீ கட்சி பஞ்சாப் முதல்வர் பகவத் மானுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

bjp

இதனைக்கண்ட பாஜக பொறுப்பாளர்கள் எதிர்க்கட்சியை சேர்ந்தவருக்கு எதற்காக வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று குரலை உயர்த்திய நிலையில், அவர் கட்சிக்கு எதிரான செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறி 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.