இனிமேல் சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும்.! கோரிக்கை வைத்த பாஜக பெண் எம்.பி.!

இனிமேல் சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும்.! கோரிக்கை வைத்த பாஜக பெண் எம்.பி.!


bjp MP request to mens day

உலகம் முழுவதும் உள்ள பெண்களை கவுரவிக்கும் வகையில், பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் பெண்களுக்கு, உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்தவகையில், இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு முக்கிய தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல துறைகளை சேர்ந்தவர்களும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்தநிலையில், மத்திய பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று கூடியது. பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வில் இன்று மகளிர் தினத்தையொட்டி அவைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய மாநிலங்களவை பாஜக பெண் எம்.பி. சோனல் மன்சிங், சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.