இந்தியா சினிமா

விராட் கோலி, அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும். ! அதிரவைத்த பாஜக எம்எல்ஏ!

Summary:

Bjp MLA said virat kohli shold divorce anushka sharma

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும்,  தயாரிப்பாளருமான அனுஷ்கா ஷர்மா பாட்டலஸ் லோக் என்ற வெப்சீரிஸ் ஒன்றை தயாரித்திருந்தார். இந்த வெப்சீரிஸ் கடந்த 15ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்  பல சர்ச்சையையும் கிளப்பியது.

இந்த சீரிஸில் அருணாசல பிரதேச மாநிலத்தில் வாழும் குறிப்பிட்ட இன மக்களை அவதூறு செய்வதுபோன்ற காட்சிகள் இருப்பதாக அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய மனித உரிமை கமிஷனில் புகார் அளித்தனர் 

மேலும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ நந்தகிஷோர் குர்ஜார் இந்த வெப் சீரிஸில் தனது அனுமதியின்றி தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தியதாக  காவல்நிலையத்தில் அனுஷ்கா ஷர்மா மீது புகார் அளித்துள்ளார். 

 மேலும்  இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, இந்த வெப்சீரிஸ் தேசிய பாதுகாப்பு சட்டம் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தேச பற்று உடையவர். அவருக்கு இந்தியா மீது பெரியளவில் மரியாதை உள்ளது. எனவே உடனே அவர் அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்று கூறி அதிர வைத்துள்ளார்.


Advertisement