இந்தியா

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.12,000 மானியம்.! அரசு அதிரடி அறிவிப்பு!

Summary:

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியில் அரசாங்கம் மற்றும் வாக

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியில் அரசாங்கம் மற்றும் வாகன நிறுவனங்களும் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜாய் நிறுவனம் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் வரை சுமார் ரூ.12 ஆயிரம் வரை மானியம் வழங்குகின்றன. 

குறைந்த வேக திறன் கொண்ட இந்த வாகனங்களை இயக்குவதற்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்று என எதுவும் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு மின்சார வாகன விற்பனை மேம்பட, மாநில அரசுகள் தற்போது தனிப்பட்ட மானியங்களை அறிவிக்கின்றன. 

அந்த வகையில், குஜராத் அரசு தனது மாநில மக்களுக்கு ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது. மாநிலத்தில் சுற்றுச்சூழல் காக்க வேண்டும் என்பதற்காகவும், மற்ற மாநிலங்களிடையே சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக. குஜராத்தில் ஜாய்-பைக் மின்சார இரு சக்கர வாகனங்களின் எக்ஸ்-ஷ் விலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் ரூ.12 ஆயிரம் வரை மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அடுத்த நான்கு வருடங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்களை சாலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்திருந்த நிலையில், குஜராத் மாநிலத்தை மாசு இல்லாத மாநிலமாக மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். 


Advertisement