
Bihar youth invent umbrella to protect from coronovirus
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பெரும்பாலான நாடுகள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனாவைரஸில் இருந்து தப்ப கொரோனா குடை ஒன்றை கண்டுபிடித்துள்ளார் பிஹார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
இதனை கண்டுபிடித்த பீகார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தின் பர்தவுலியின் தேவ்ஹரா எனும் கிராமத்தை சேர்ந்த வினித் குமார் என்ற இளைஞர் கூறுகையில், சாதாரண குட்டையில் ஒருசில மாற்றங்களை செய்து இதனை வடிவமைத்துள்ளதாகவும், பட்டனை அழுத்தினாள் குடை விரியும்.
குடை விரியும்போது கால்வரை தொங்கக்கூடிய வகையில் பிளாஸ்டிக் கவர் ஓன்று வெளிவரும், இந்த கவர் குடை பிடித்திருப்பவரை முற்றிலும் மறைத்துக்கொள்ளும், அதேசமயம் குடையின் மேல்பகுதியில் வைக்கப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்தும் தெளிக்கப்பட்டுவிடும்.
மருந்து மேலும் தெளிக்கவேண்டும் என்றால் அருகில் இருக்கும் பட்டனை அழுத்தினாள் கூடுதலாக மருந்து தெளிக்கப்படும் என கூறியுள்ளார். இதனால் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பாக வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்ப முடியும் என அந்த இளைஞர் கூறியுள்ளார்.
மேலும், இந்த குடையின் விலை 300 என தான் நிர்ணயித்திருப்பதாகவும், இந்த குடையை சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் தலைமையகத்தின் அங்கீகரத்திற்கு டெல்லிக்கு அனுப்பியுள்ளதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement