திடீரென மாயமான 16 வயது சிறுமி! வீட்டை சுற்றி ஒரே இரத்தம்... கடைசியில் போலீஸ்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி! அதிர்ந்துப்போன பெற்றோர்...!!!
பீகார் மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் மாயமான வழக்கு, காவல் துறையினரையே குழப்பத்தில் ஆழ்த்திய நிலையில், இறுதியில் அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகியுள்ளது. வீடு முழுவதும் இரத்தம் சிதறி கிடந்ததால் முதலில் கொலை சந்தேகம் எழுந்திருந்தது. ஆனால் தீவிர விசாரணையில், அந்தச் சிறுமி தனது காதலனுடன் மகாராஷ்டிராவில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.
வீடு முழுவதும் இரத்தம்.. குடும்பத்தினர் அதிர்ச்சி
பீகார் மாநிலம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி இரவு திடீரென காணாமல் போனார். இதையடுத்து வீட்டில் தேடிய குடும்பத்தினர், வீடு முழுவதும் இரத்தம் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் உடனடியாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் முதலில் இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
மொபைல் லொகேஷன் மூலம் கிடைத்த திருப்பம்
தகவலின்படி, தடய அறிவியல் ஆய்வு, கைபேசி பதிவுகள் மற்றும் Mobile Location விவரங்கள் அடிப்படையில் காவல் துறையினர் தீவிரமாக தேடுதல் நடத்தினர். அதன்பின் கிடைத்த தகவலின் பேரில், அந்தச் சிறுமி மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவண்டியில் தனது காதலன் மயங்க் குமாருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பிவண்டிக்கு சென்ற காவல் துறையினர், மயங்க் குமாரை கைது செய்து இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், வீட்டினர் உறவை ஏற்க மாட்டார்கள் என்ற பயத்தில் தப்பிச் செல்ல திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கோழி இரத்தம் சிதறவிட்டு நாடகம்
மேலும், தங்களை குடும்பத்தினரும் காவல்துறையினரும் தேடாமல் இருக்கவே இந்த திட்டத்தை தீட்டியதாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். ஏதோ கொடூர சம்பவம் நடந்துவிட்டதாக நம்ப வைப்பதற்காக ஒரு கோழியை வெட்டி, அதன் இரத்தத்தை வீடு முழுவதும் சிதறவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த போலி கொலை நாடகம் தொழில்நுட்ப உதவியுடன் உடைக்கப்பட்டதாக தேஹ்ரி ஏ.எஸ்.பி அதுலேஷ் ஜா தெரிவித்துள்ளார். மேலும், சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கோவை சிறுமி கொலை வழக்கில் முதல்வர் விஜய்யிடம்.... தாயார் எழுப்பிய கலங்க வைக்கும் கேள்வி..!!!