மாரி செல்வராஜின் 'வாழை' பட சிறுவனின் +2 mark வைரல்.! நடிப்பிலும் படிப்பிலும் அசத்திய பொன்வேல்.!
பள்ளிக்குச் சென்ற சிறுமி திடீரென மாயம்! 13 வருஷமா தேடுனாங்க......கடைசியில் போலீஸையே அதிரவைக்கும் உண்மை பின்னணி ..!!!
பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி தற்போது நான்கு குழந்தைகளின் தாயாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பல ஆண்டுகளாக மர்மமாக இருந்து வந்த இந்த வழக்கில், சமீபத்திய போலீஸ் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பெண், தனது விருப்பத்திலேயே வீட்டை விட்டு சென்றதாக தெரிவித்ததால் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
2013-ல் பள்ளிக்குச் சென்றபோது மாயம்
முசாபர்பூர் மாவட்டத்தின் தேவ்கான் கிராமத்தைச் சேர்ந்த குல்நாஸ் காதுன் என்ற சிறுமி, கடந்த 2013-ம் ஆண்டு பள்ளிக்குச் சென்றபோது திடீரென காணாமல் போனார். இதையடுத்து அவரது தாய் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த ராகேஷ் தாக்கூர் என்பவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பல ஆண்டுகள் தேடியும் அவரையோ, சிறுமியையோ கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.
இதையும் படிங்க: மருமகளின் தலையை துண்டித்த மாமியார்.... தலை ஒரு இடத்திலும், உடலின் மற்ற பாகங்கள் வேறு இடத்திலும்...! கொடூர கொலையின் பரபரப்பு வாக்குமூலம்!
13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை
இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் ராணி குமாரி தலைமையிலான போலீஸ் குழு சமீபத்தில் அந்தப் பெண்ணை கண்டுபிடித்தது. அப்போது நடந்த விசாரணையில், குல்நாஸ் தனது உறவினரான அப்துலுடன் காதலில் இருந்தது தெரியவந்தது.
தகவலின்படி, அப்துல் அவரது பக்கத்து வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். அவருடன் சேர்ந்து தான் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் இருவரும் குடும்பமாக வாழ்ந்து வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நான்கு குழந்தைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜர்
தற்போது அந்தப் பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கு, தனது விருப்பத்திலேயே சென்றதாக போலீஸ் விசாரணை போது அளித்த வாக்குமூலத்தையும் அவர் உறுதிப்படுத்தினார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, அவர் தனது கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இதன்மூலம் 13 ஆண்டுகளாக நீடித்த மர்மத்திற்கு முடிவு கிடைத்துள்ளது.