இந்தியா

டெல்லி மிருகக்காட்சி சாலையில் சிங்கத்திடம் சிக்கிய நபர்! திக் திக் நிமிடங்கள்! வைரல் வீடியோ.

Summary:

Bihar man jumps inside lion enclosure in Delhi zoo

டெல்லி வனவிலங்கு பூங்காவில் சிங்கம் இருக்கும் பகுதிக்குள் இளைஞர் ஒருவர் குதித்து சென்று அந்த சிங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதுபோல் சாதாரணமாக அமர்ந்திருப்பதும், பொறுமையாக இருக்கும் சிங்கம் சிறிது நேரம் கழித்து அவர் மீது பாயும் காட்சியும் வீடியோவாக பதிவாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி ரேஹான் கான் என பெயர்கொண்ட அந்த இளைஞர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் எப்படி சிங்கம் இருக்கும் பகுதிகள் சென்றார் என தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.

அவர் சிங்கத்திடம் சென்று அருகில் அமர்ந்துள்ளார், மெதுவாக அவரிடம் வரும் சிங்கம் முதலில் கன்றுகுட்டிபோல அவரிடம் செல்லமாக நிற்கிறது. சிறிது நேரத்தில் அந்த இளைஞர் மீது அந்த சிங்கம் பாய தொடங்குகிறது. இதுகுறித்து வனவிலங்கு பூங்கா ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த ஊழியர்கள் சிங்கத்திடம் இருந்து அந்த வாலிபரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் சிறிதுகூட காயம் இல்லாமல் அந்த இளைஞர் உயிருடன் தப்பியது மிகப்பெரிய ஆச்சரியம் என்றாலும், தற்போது அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 


Advertisement