நீதிமன்ற வளாகத்திலேயே காதல் ஜோடிக்கு திருமணம்; கடத்தல் வழக்கில் பகீர் திருப்பமாக டும்., டும்., டும்..!
நீதிமன்ற வளாகத்திலேயே காதல் ஜோடிக்கு திருமணம்; கடத்தல் வழக்கில் பகீர் திருப்பமாக டும்., டும்., டும்..!

பீகார் மாநிலத்தில் உள்ள பார்கானியா பகுதியை சேர்ந்த இளைஞர் ராஜா. அதே பகுதியை சேர்ந்த பெண்மணி அர்ச்சனா. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது.
இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறியதாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக அர்ச்சனாவின் தந்தை மகளை கடத்திவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், நீதிமன்றத்தில் காதல் ஜோடி சரணடைய வந்தது. அப்போது இருதரப்பு பெற்றோரும் பேசி சமாதானம் அடைந்தனர்.
இதனையடுத்து, நீதிமன்ற வளாகத்திலேயே காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.