படுக்கையறையில் காதலனுடன் பதவி செய்து வீடியோ வெளியிட்ட பெண்..! ஓடி வந்துட்டு பேச்ச பாருங்க.... விளாசும் நெட்டிசன்ஸ்! வைரலாகும் வீடியோ..!!!



bihar-couple-bedroom-video-viral-social-media-debate

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. படுக்கையறையில் அமர்ந்து பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில், பெண் தனது பெற்றோர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

வீடியோவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

வைரலாகும் வீடியோவில் பேசியுள்ள அர்ச்சனா குமாரி என்ற இளம்பெண், தாங்கள் பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது கணவரின் குடும்பத்தினருக்கு பெற்றோர் தேவையற்ற அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பு தனது தாய் மற்றும் தந்தையையே சாரும் என்றும் அவர் கூறியுள்ளார். வீடியோவின் இறுதியில் தனது மைத்துனரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஐயோ.... வலிக்குது... தயவு செய்து விட்டுடுங்க! பயிற்சியில் கதறி துடித்த மாணவி.... கண்டுக்கொள்ளாத ஆசிரியர்.! வைரல் வீடியோவால் வெடித்த விவாதம்..!!!

காதல் திருமணமா?

வீடியோவில் அர்ச்சனா குமாரி நெற்றியில் குங்குமத்துடன் காணப்படுகிறார். அவருடன் இளைஞரும் அருகில் அமர்ந்திருப்பதால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தகவலின்படி, இளைஞரின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டு வரும் பிரச்சினைகளை வெளிக்கொணரவே இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இணையத்தில் சூடுபிடித்த விவாதம்

வீடியோ பரவியதையடுத்து, ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருவிதமான கருத்துகள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக, இளம் வயதில் எடுக்கப்படும் அவசர முடிவுகள் குடும்பங்களுக்குள் சிக்கல்களை உருவாக்குகின்றன என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மற்றொரு தரப்பினர், வயது வந்தவர்கள் தங்களது வாழ்க்கைத் தேர்வுகளை மேற்கொள்ள உரிமை கொண்டவர்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர். இதனால், காதல் திருமணம், குடும்ப ஒப்புதல் மற்றும் பெற்றோர்-பிள்ளைகள் உறவு குறித்து சமூக வலைத்தளங்களில் மீண்டும் விவாதம் தீவிரமடைந்துள்ளது.

 

இதையும் படிங்க: நள்ளிரவில் ரகசிய சந்திப்பு! உறவை மீறிய தகாத உறவால் சொந்த சித்தியையே திருமணம் செய்த பேரன்! தாத்தா செய்த வேலையை பாருங்க...!!!