கள்ளச்சாராயம் குடித்த இருவர் பார்வை பறிபோய் பரிதாப பலி; கண்ணீரில் குடும்பத்தினர்.!



Bihar Consumption of Liquor Alcohol 2 Died 

 

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. இதனால் அம்மாநிலத்தை சேர்ந்த நபர்கள், மதுபானம் அருந்த கள்ளசாராயத்தை நம்பி இருக்கின்றனர். கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்தாலும் பலன் இல்லை. 

விழாக்கள், திருமணங்கள் உட்பட பல நிகழ்ச்சிகளின்போது கள்ளத்தனமாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தை அருந்தி உயிரிழப்புகள் வரை பல விஷயங்கள் தொடருகிறது. 

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள முஸாபர்பூர் பகுதியில் நடந்த விழாவில் கள்ளத்தனமாக சிலர் கள்ளச்சாராயம் அருந்தி இருக்கின்றனர். இதனால் இருவர் அங்கேயே பார்வை பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்கள் உமேஷ் ஷா மற்றும் தர்மேந்திரா ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

அவர்களுக்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்த 2 பேரையும் கைது செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் மோதிஹாரி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பரிதாபமாகி பலியாகி இருந்தனர்.