கொரோனாவால் உயிரிழந்தோரின் .குடும்பத்தினருக்கு ரூ.4 இலட்சம் இழப்பீடு - அமைச்சரவை ஒப்புதல்.!

இந்திய அளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் 4.83 இலட்சம் தங்களின் உயிரை இழந்தனர். இவர்களுக்கு மாநில அரசின் சார்பில் நிதி வழங்கக்கூறி, தேசிய பேரிடர் மேலாண்மை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, அந்தந்த மாநில அரசுகள் சார்பில் கொரோனாவால் உயிரிழந்தோருக்கு இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், மாநில அரசின் சார்பில் பல்வேறு நிதிஉதவி மற்றும் கல்வி உதவிகள் போன்றவை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.4 இலட்சம் கருணை இழப்பீடு தொகை வழங்க பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Bihar Cabinet approves an ex gratia of Rs 4 lakhs each to the next of kin of those who lost their lives to COVID-19
— ANI (@ANI) January 5, 2022