மனைவி அழகாக இருந்ததால் கணவன் செய்த காரியம்.. பதறவைக்கும் பரபரப்பு சம்பவம்..

மனைவி அழகாக இருந்ததால் கணவன் செய்த காரியம்.. பதறவைக்கும் பரபரப்பு சம்பவம்..


Bengaluru women commit suicide

கணவன் தன்னை வீட்டிலையே அடைத்துவைத்தநிலையில், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த வினய் என்பவரும், சங்கீதா என்ற பெண்ணும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆன நாளில் இருந்தே மனைவியின் நடத்தை மீது கணவனுக்கு சந்தேகேம் இருந்ததாக கூறப்படுகிறது.

மனைவியின் தொலைபேசியை சோதிப்பது, அவரது நடவடிக்கையை கவனிப்பது என தனது மனைவியை சந்தேக பார்வையுடனே வினய் நடத்திவந்ததாக தெரிகிறது. மேலும், நீ அழகாக இருப்பதால் யாரிடமும் பேச கூடாது, பழக கூடாது எனவும் வினய் தனது மனைவியை கொடுமை படுத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மனைவியை வீட்டிர்க்குள்ளையே அடைத்துவைத்து அவரை வெளியே விடாமல் வினய் கொடுமை படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் சங்கீத எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

தலைமறைவாக இருக்கும் வினய்யை போலீசார் தேடி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் கணவன் கொடுமை படுத்தியாதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.