9 ஆம் வகுப்பு படிக்கும் மகனுக்கு வந்த கொரியர்..! கொரியரை திறந்துபார்த்த தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! உள்ளே என்ன இருந்தது தெரியுமா.?

9 ஆம் வகுப்பு படிக்கும் மகனுக்கு வந்த கொரியர்..! கொரியரை திறந்துபார்த்த தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! உள்ளே என்ன இருந்தது தெரியுமா.?


Bengaluru businessman opens courier addressed to minor son finds ganja

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனது மகனுக்கு வந்த பார்சல் ஒன்றை திறந்து பார்த்த தந்தை அதிர்ச்சியில் உறைந்து நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூருவில் உள்ள சதாசிவ நகரைச் சேர்ந்த 45 வயது தொழிலதிபர் ஒருவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் அந்த சிறுவனுக்கு சமீபத்தில் கொரியர் ஒன்று வீட்டிற்கு வந்துள்ளது. சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததால் அந்த கொரியரை சிறுவனின் தந்தை திரண்டு பார்த்துள்ளார்.

அப்போது கொரியர் உள்ளே அடர் பழுப்பு நிறத்தில் ஏதோ பொடி போன்ற ஒன்று இருந்ததை பார்த்துள்ளார். அது என்ன பொடி என்பதை தெரிந்து கொள்வதற்காக அதை  புகைப்படமாக எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பி அது குறித்து விசாரித்ததில் அந்த பொடி கஞ்சா  பொடி என்பது தெரியவந்துள்ளது. 

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அந்த பார்சலை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பார்சல் எங்கிருந்து வந்தது? யார் அனுப்பியது என்று நடத்திய விசாரணையில் அந்த பார்சல் எம்ஜி ரோட்டிலிருந்து தீரஜ் குமார் என்பவரால் அனுப்பப்பட்டது என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து தீரஜ் குமாரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனுக்கு பார்சலில் கஞ்சா அனுப்பி வைக்கப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.