நைட்டி போட்டது ஒரு குத்தமா! மனைவியை தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற கணவன்.... பகீர் சம்பவம்!!!
கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஆடை தொடர்பான தகராறு கொடூரமாக முடிந்தது. கணவன், மனைவியை தீவைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரமாக காயமடைந்த மனைவி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆடை விவகாரம்… நீண்டநாள் தகராறு
பெலகாவி அருகே ஹத்தரவாடா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா பாட்டீல் என்ற கூலித் தொழிலாளி, தனது மனைவி மஞ்சுளா நைட்டி அணிவதை நீண்ட நாட்களாக எதிர்த்து வந்ததாக தகவல். இதனால் தம்பதியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்துள்ளன. திருமணம் நடைபெற்றது எட்டு ஆண்டுகளுக்கு முன் என்றாலும், இந்த விவகாரம் தொடர்ந்து மனக்கசப்பை உருவாக்கி வந்தது.
தடையை மீறியதால் கொடூரம்
சம்பவம் நடந்த நாளில், கணவனின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மஞ்சுளா நைட்டி அணிந்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா, திடீரென அவர்மீது தீவைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் மஞ்சுளா அலறியதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டனர்.
மருத்துவமனையில் போராடும் மனைவி
காயமடைந்த மஞ்சுளா உடனடியாக பெலகாவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தீக்காயம் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பேரில் நந்த்கட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
தீ வைத்து தாக்கிய கணவன் சம்பவத்திற்குப் பிறகு தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மனைவியின் தனிப்பட்ட விருப்பத்தையும் ஆடை சுதந்திரம் என்பதையும் ஏற்காத இந்த செயல் சமூகத்தில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: மனைவியின் மூக்கு, கழுத்து, கன்னத்தை கடித்து குதறிய கணவன்! ரத்த வெள்ளத்தில் துடி துடித்த பெண்! அதிரவைக்கும் காரணம்!!!