இந்தியா

கண்கலங்கவைக்கும் சம்பவம்!! டிவி பார்ப்பதில் தந்தைக்கு ஆதரவாக இருந்த 3 வயது மகளை அடித்தே கொலை செய்த தாய்..

Summary:

3 வயது பிஞ்சு குழந்தையை தாயே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள

3 வயது பிஞ்சு குழந்தையை தாயே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் நகர்பவி பகுதியில் வசித்துவருபவர்கள் ஈரண்ணா - சுதா(26) தம்பதியினர். இவருக்கு மூன்று வயதில் வினுதா என்ற பெண் குழந்தை இருந்தது. சுதா அந்த பகுதியில் உள்ள டைல்ஸ் கடை ஒன்றில் அலுவலக பணியாளராகவும், ஈரண்ணா கூலிவேலையும் பார்த்துவந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்த ஈரண்ணா தொலைக்காட்சியில் செய்தி சேனல் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எப்போது பார்த்தாலும் செய்தி சேனல்தானே? செய்தி சேனல் பார்ப்பது என்றால் இனி நீங்கள் வீட்டிற்கே வரவேண்டாம் என கூறி சண்டைபோட்டுள்ளார்.

அப்போது அவரது மூன்று வயது குழந்தை வினுதா அப்பாவை திட்டாதீர்கள், அப்பாவே டிவி பார்க்கட்டும், அம்மாவிற்கு பைத்தியம் பிடித்து விட்டது என கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த சுதா பெத்த பிள்ளை என்றும் பார்க்காமல் அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் ஒன்றும் தெரியாததுபோல் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மல்லத்தஹள்ளி அருகே கடை ஒன்றில் சாட் உணவுகள் சாப்பிட்டுக்கொண்டிருந்ததாகவும், அப்போது தனது மகளை காணவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து போலீசார் குழந்தையை தேடிவந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் வசிக்கும் அதே பகுதியில் குழந்தையின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் குழந்தையை கொலை செய்ததை சுதா ஒப்புக்கொண்டார்.

பிஞ்சு குழந்தை என்றும் பார்க்காமல் ஆத்திரத்தில் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement