ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு தாக்குதல்; பதைபதைப்பு காட்சிகள் வெளியானது.! வீடியோ உள்ளே..!

ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு தாக்குதல்; பதைபதைப்பு காட்சிகள் வெளியானது.! வீடியோ உள்ளே..!



Bangalore Rameshwaram Cafe Blast 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், வைட்பீல்ட் பகுதியில் ராமேஸ்வரம் கபே செயல்பட்டு வருகிறது. பெங்களூர் பகுதியில் புகழ்பெற்று விளங்கும் இக்கபேயில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். 

இந்நிலையில், இன்று கபேயில் திடீரென வெடிவிபத்து நடந்தது. நல்வாய்ப்பாக இதில் பெரிய அளவு காயம் இல்லை எனினும், 8 பேர் லேசான காயத்துடன் பாதிக்கப்பட்டனர். 

இவ்விவகாரம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு விரைந்து நடத்திய சோதனையில் ஐஇடி ரக வெடிகுண்டு வெடித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பயங்கரவாத சதிச்செயலா? என விசாரணை நடந்து வருகிறது. 

வெடிவிபத்து நடந்தபோது பதிவான சிசிடிவி கேமிரா காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.