குண்டும் - குழியுமான சாலையால், லாரி சக்கரத்தில் சிக்கி பெண் ஆசிரியை உடல் நசுங்கி மரணம்.!

குண்டும் - குழியுமான சாலையால், லாரி சக்கரத்தில் சிக்கி பெண் ஆசிரியை உடல் நசுங்கி மரணம்.!



Bangalore Magadi Road Anjanapura Area Teacher Died under truck wheel Fall Down from Bike

உறவினருடன் ஊருக்கு பயணம் செய்த பெண்மணி, குண்டும் குழியுமான சாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், கொட்டிகேபாளையா பகுதியில் வசித்து வரும் பள்ளி ஆசிரியை சர்மிளா (வயது 48). இவர் தனது உறவினருடன் தாவணகெரே நகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். இருசக்கர வாகனத்தை உறவினர் இயக்க, சர்மிளா பின்னால் அமர்ந்துள்ளார். 

இவர்கள் இருவரும் பேரடஹள்ளி அருகே உள்ள அஞ்சனா நகர் பகுதியில் செல்கையில், சாலையில் இருக்கும் பள்ளத்தில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கி செல்வதை தவிர்க்க உறவினர் முயற்சி செய்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சர்மிளா சாலையில் விழுந்துள்ளார். 

bangalore

அவ்வழியாக வந்த லாரியின் பின்புற சக்கரத்தில் சிக்கிய ஷர்மிளாவின் மீது லாரி ஏறி இறங்க, அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். உறவினர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பிக்கவே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பேரடஹள்ளி காவல் துறையினர் ஷர்மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், மாகடி சாலையில் இருந்து அஞ்சனா நகர் வரையில் காவேரி குடிநீர் இணைப்பு குழாய் பதிப்பு பணிகள் நடைபெறுவதால் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டு ஷர்மிளா பலியானது உறுதியாகியுள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் லாரி ஓட்டுநர் மாதேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.