இந்தியா

பதறவைத்த விபத்து: பெங்களூருவில் பயங்கர தீ! கொழுந்துவிட்டு எரியும் கார்கள்! வீடியோ!

Summary:

Bangalore fire accident at bangalore air show video

பெங்களூரு விமான கண்காட்சி நடைபெறும் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 300 க்கு மேற்பட்ட கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகியுள்ளது. மேலும் தீ மேலும் பருவுவதால் கார்கள் வெடித்து டமால், டுமீல் என சத்தம் எழுகிறது. இந்த சம்பவம் பெங்களூர் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாகனங்கள் நிறுத்தும் இடத்தை சுற்றி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் புற்கள் வளர்ந்துள்ளதாலும் , காய்ந்துபோன புற்கள் வெட்டப்பட்டு அங்கேயே போடப்பட்ட நிலையில்  வெப்பத்தின் காரணமாக தீ பிடித்து வாகனங்கள் இருக்கும் திசை நோக்கி நகர்ந்ததாலும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பப்பட்டுள்ள வாகனங்கள் என்பதால் தீயை அணைப்பதில் தீயணைப்பு படை வீரர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வாகனங்களில் வீரர்கள் வந்து தீயை அணைக்க முயற்சி செய்தும் தீ மளமளவென பரவியதால் அந்த பகுதி முழுக்க புகை மூட்டம் காணப்பட்டுகிறது. 


Advertisement