இந்தியா

சொந்த மகள் உடைமாற்றுவதை பார்த்து, பலாத்கார முயற்சி.. கேடுகெட்ட 60 வயது தந்தை பகீர் செயல்.!

Summary:

சொந்த மகள் உடைமாற்றுவதை பார்த்து, பலாத்கார முயற்சி.. கேடுகெட்ட 60 வயது தந்தை பகீர் செயல்.!

தான் பெற்றெடுத்த மகள் உடைமாற்றுவதை பார்த்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த தந்தையின் பகீர் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில், 60 வயதுடைய முதியவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்துவிட்ட நிலையில், அவர் தனது 22 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். மனைவி இறந்த பின்னர் பெற்றெடுத்த தந்தையே தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார். 

இதற்கு பெண்மணி கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தந்தை மகள் என்றும் பாராது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், தனது மகள் குளித்துவிட்டு உடை மாற்றும் போது அதனை ஒளிந்து பார்த்தும் வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக பெண்மணி குளித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு இருந்துள்ளார். 

அப்போது, சபல புத்திகொண்ட தந்தை மகளை பார்த்த நிலையில், கதவை திறந்து உள்ளே சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி தந்தையை தள்ளிவிட்டு, விரைந்து உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உறவினர் பதறியபடி இளம்பெண்ணின் இல்லத்திற்கு வந்துவிட, மகளையும், அவரை மீட்க வந்தவரையும் முதியவர் தாக்கியுள்ளார்.

இதனால் இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், தந்தை மீது பெண்மணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் தந்தையான முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


Advertisement