பள்ளி ஆசிரியர் இயற்கை மரண வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. பெண், கணவர் என 3 பேர்.., பேரதிர்ச்சி.!

பள்ளி ஆசிரியர் இயற்கை மரண வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. பெண், கணவர் என 3 பேர்.., பேரதிர்ச்சி.!


Bangalore Banashankari Former School Teacher Mystery Death Police Investigation

ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் உயிரிழந்த விவகாரத்தில், ஆசிரியரின் சகோதரர் அளித்துள்ள புகார் அதனை கொலை வழக்காக மாற்றி இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பனஷங்கரி காவல் நிலையத்திற்கு எதிர்புறம் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் சி.டி ஜெயபால் (வயது 74). இவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்ட நிலையில், மனைவியின் மறைவுக்கு பின்னர் சி.டி ஜெயபால் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். 

ஜெயபாலின் சகோதரர் தனஜெய், ஹாசன் மாவட்டத்தில் உள்ள பெலகோடு பகுதியில் வசித்து வருகிறார். இவர் சகோதரர் ஜெயபாலை பெண், அவரின் கணவர் மற்றும் குடும்பத்தை சார்ந்த மூவர் எரித்துக்கொலை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், நாங்கள் இல்லாமல் ஜெயபாலின் உடலை எப்படி இறுதிச்சடங்கு செய்தீர்கள்? என்று கேட்டதற்கு, தனஜெய் மற்றும் அவரது மூத்த சகோதரரையும் 3 பேர் கும்பல் தாக்கியுள்ளது. 

bangalore

தனஜெய் வழங்கிய புகாரில், சகோதரர் ஜெயபாலின் உடலை பிரேத பரிசோதனை செய்ய இயலாத வகையில், திட்டமிட்டு எரித்து கொலை செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவர்கள் ஜெயபாலின் சொந்த ஊரை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஜெயபாலின் வீட்டில் உள்ள பகுதியில், கடந்த 7 வருடமாக ஜெயபாலின் அனுமதியுடன் அவர்கள் தங்கியிருந்துள்ளனர். 

இதன்போது, ஜெயபாலுக்கு சமைத்து, துணிதுவைத்து, அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்ததும் தெரியவந்துள்ளது. உடலளவில் பல வியாதியால் அவதிப்பட்டு வந்த ஜெயபால், இறுதிக்காலத்தில் தன்னை பார்த்துக்கொண்டு பெண்ணுக்கு நிலம் வழங்குவது தொடர்பாக உயிலில் எழுதி வைத்துள்ளார். இதனால் சொத்து தகராறு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.