# BREAKING# அயோத்தி நிலத்தை மூன்றாக பிரித்தது தவறு! மசூதி கட்டுவதற்கு மாற்று நிலம்!
அயோத்தியில் பாபர் மசூதி, வெற்றிடத்தில் கட்டப்படவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில் கூறினார்.
ராமஜென்மபூமி - பாபர் மசூதி அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், அரசியல் சாசன அமர்வு சார்பில் 5 நீதிபதிகளும் ஒருமித்த் தீர்ப்பு வழங்கவுள்ளது என்று தமைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி வருகிறது.
அலகாபாத் நீதிமன்றம் அயோத்தி நிலத்தை மூன்றாக பிரித்தது தவறு என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி வழக்கு தள்ளுபடி.
மசூதி கட்டிக்கொள்வதற்கு இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளது. வக்கு போர்டு ஏற்கும் இடத்தில 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு, உ.பி அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.