பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருது! அமெரிக்காவில் கெத்து காட்டும் பிரதமர் மோடி!



award for modi


தூய்மை இந்தியா திட்டப்பணிக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர்’ என்ற விருது வழங்கப்பட்டது. பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.  

இதனையடுத்து பிரதமர் மோடி, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்தியாவில் தூய்மை பாரதம் திட்டத்தை மோடி தொடங்கிவைத்ததற்காக அவருக்கு குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது. மைக்ரோ சாப்ட் நிறுவனர் மற்றும் தொழிலதிபர் பில்கேட்ஸ், மெலிண்டா பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது. விருதை ஏற்று நன்றி தெரிவித்த மோடி இந்தியாவில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டதாகவும் அது பெரும்பாலும் ஏழை மக்களுக்குத்தான் பலன் அளித்துவருகிறது என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய பாரத பிரதமர், குழந்தைகளுக்கு ஏற்பட்ட இருதய நோய்கள் இந்தியாவில் குறைந்துள்ளன என்றும் பெண்கள் உடல் நலத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.