சிறந்த இந்திய உணவகமாக அமொிக்காவில் உள்ள இந்திய ஓட்டலுக்கு விருது.!

Summary:

சிறந்த இந்திய உணவகமாக அமொிக்காவில் உள்ள இந்திய ஓட்டலுக்கு விருது.!

அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் பியர்டு அறக்கட்டளை, ஆண்டு தோறும் மிகச் சிறந்த உணவகங்கள், சமையல் கலைஞர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக, விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கவில்லை.

இந்தநிலையில், இந்த வருடம் சிகாகோ நகரில் சிறந்த உணவகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த வகையில் இந்தாண்டுக்கான சிறந்த ஓட்டலுக்கான விருதை இந்திய ஓட்டலான சாய் பானி ஓட்டல் பெற்றுள்ளது. குறைந்த விலையில் தரமான உணவுகளை மக்களுக்கு வழங்குவதாகவும் அந்த அறக்கட்டளை பாரட்டு தொிவித்து உள்ளது.

சாய் பானி என்றால் தேனீர் தண்ணீர் என்று பொருள். இந்த உணவகத்தில் சமோசா, கச்சோரி, பானி பூரி, பாவ் பாஜி, பேல் பூரி, வடா பாவ், பல வகை தேனீர் உட்பட இந்தியாவின் சுவை மிகுந்த உணவு வகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement