
Auto revenge car video goes viral
உலகின் பல்வேறு இடங்களில் தினம் தினம் ஏதாவது ஒரு விசித்திரமான சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சில நேரங்களில் எதார்த்தமாக நடைபெறும் விபத்துகள் கூட மனதில் கஷ்டத்தை ஏற்படுத்தினாலும் அங்கு நடைபெறும் காட்சிகள் சுவாரசியமாக அமைந்துவிடுகிறது.
அந்த வகையில் தன் மீது மோதிய கார் ஒன்றை ஆட்டோ ஓன்று பழிவாங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரோட்டை கடக்க முயலும் ஆட்டோ ஒன்றின் மீது நேராக வந்த கார் வேகமாக மோதுகிறது. இதில் ஆட்டோ ஓட்டுநர் கீழே விழுகிறார்.
கார் இடித்த வேகத்தில் ஆட்டோ வேகமாக நகர்கிறது. ஆட்டோவை பிடிக்க அதன் ஓட்டுநர் ஓடுகிறார். ஆனால் அந்த ஆட்டோ வட்டம் அடித்து நேராக வந்து தன்னை இடித்த காரின் பின்புறத்தில் இடித்து அந்த காரை இழுத்து செல்கிறது.
பார்ப்பதற்கு அந்த காரை அந்த ஆட்டோ பழிவாங்குவது போன்று இருக்கும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.
Advertisement
Advertisement