உயிரிழந்த இராணுவ வீரரின் மனைவி, தாய் நாட்டிற்காகவே தன்னை அர்பணிக்கிறார்!! நெகிழ்ச்சி சம்பவம்!!



army man wife will join in army

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரசாத் மஹாதிக் என்ற ராணுவ மேஜர் 2017-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும்போது நடந்த தீ விபத்தில் உயிரிழந்தார்.

இந்தநிலையில் தனது கணவர் இறந்துவிட்ட நிலையில், வேதனையில் இருந்து மீண்டு வந்த ராணுவ மேஜர் பிரசாத் மஹாதிக்கின் மனைவி கவுரி, தனது கணவர் போலவே, தாய்நாட்டுக்காக இராணுவ பணியை தொடங்க முடிவு செய்துள்ளார்.

army

இதனால் ராணுவத்தில் சேர்வதற்கான SSB தேர்வை முதன் முறையாக எழுதினார். ஆனால் அதில் தேர்ச்சி பெறத் தவறினார். ஆனாலும்  கவுரி, விடாப்பிடியாக படித்து தம்மைப் போன்றவர்களுக்கான (விதவை )பிரிவில் முதல் மதிப்பெண் பெற்றார்.

இந்தநிலையில்  சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயிற்சியில் சேரவுள்ள அவர், அடுத்த ஆண்டு ராணுவத்தில் பணிபுரியவுள்ளார்.