இந்தியா Covid-19

சமாளிக்க முடியவில்லை.! இப்படியே போனால் அவளோ தான்.! மத்திய அரசிடம் இருகரம் கூப்பி கேட்கும் கெஜ்ரிவால்.!

Summary:

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலால் பல்வேறு மாநிலங்களும் தவித்து வருகின்றன. கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பெறுவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. எனவே உடனடியாக மத்திய அரசு டெல்லிக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

 டெல்லியில் நேற்று ஒரே நாளில் 28,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே டெல்லி மருத்துவமனைகளுக்கு போதிய ஆக்சிஜன் அளிக்க மத்திய அரசை இருகரம் குவித்து கேட்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 


Advertisement