ஊரடங்கால் திண்டாட்டம்! ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்காக டெல்லி முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

ஊரடங்கால் திண்டாட்டம்! ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்காக டெல்லி முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!



aravind-kejriwal-announced-5000-for-auto-taxi-drivers

சீனாவில் தோன்றிய கொரோனோ வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது.  இந்த கொடூர  வைரஸ் இந்தியாவிலும் பரவியநிலையில், தற்போது 1600க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனோவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கபட்டுள்ளது. 

இந்நிலையில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கவும், சமூக விலகல் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இத்தகைய ஊரடங்கு உத்தரவால் ஆட்டோ, இ-ரிக்ஷா, வாடகை கார் ஓட்டுநர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெருமளவில் தவிர்த்து வந்தனர்.

Delhi cheif minister

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஆட்டோ, கார்,  இ-ரிக்ஷா போன்ற பொது சேவை போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கப்படுமென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பணம் அடுத்த வாரத்திற்குள் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.