அடி ஆத்தி.. என்ன இதெல்லாம்? மண்டை ஓடு, எலும்புக்கூடு... அரசு ரேஷன் விநியோகத்தில் நடந்த பயங்கரம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!!
மத்தியப் பிரதேசத்தின் டீக்கம்கர் மாவட்டத்தில் அரசு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட கோதுமை மூட்டைக்குள் விலங்கின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் வெளியானதைத் தொடர்ந்து கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.
கோதுமை மூட்டையில் மண்டை ஓடு
டீக்கம்கர் மாவட்டத்தின் நன்னிடெஹரி கிராமத்தைச் சேர்ந்த கோமல் லோதி, ரேஷன் கடையில் பெற்ற கோதுமை மூட்டையை வீட்டில் திறந்தபோது, கோதுமைக்கு நடுவே மண்டை ஓடு மற்றும் எலும்புகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக அப்பகுதி மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கிராம மக்களின் எதிர்ப்பு
தகவலின்படி, இந்த கோதுமை மூட்டைகள் விதிசா மாவட்டத்தில் உள்ள 'சங்கல்ப்' கிடங்கிலிருந்து அனுப்பப்பட்டவை. சம்பவம் குறித்து அறிந்த கிராம மக்கள் ரேஷன் கடை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்களின் உடல்நலன் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பொறுப்புக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
விநியோகம் நிறுத்தம்; விசாரணைக்கு உத்தரவு
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கோதுமை விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து கோதுமை மூட்டைகளையும் மீண்டும் கிடங்கிற்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: என்ன கொடுமை இதெல்லாம்... பிரேத பரிசோதனை செய்ய வந்த சடலம்! அடுத்த நொடி பிணவறையில் நடந்த பெரிய ட்விஸ்.....! பகீர் சம்பவம்!!!