சே குவேரா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவை முதன்முதலில் பேட்டி எடுத்த இந்தியர் காலமானார்!

ANI senior reporter died


ANI senior reporter died

 

ANI செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளரும், அந்நிறுவனத்தின் தமிழக செய்தி பிரிவின் தலைமை பொறுப்பாளராகவும் இருந்த கோபிநாத் இன்று வயது முதிர்வின் காரணமாக காலமானார். இவரின் மறைவிற்கு உலக அளவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

50 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றியகோபிநாத், சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் நடந்த முதல் பொது தேர்தல் குறித்த செய்திகளை களத்திலிருந்து கொடுத்தவர். கியூபாவில் சே குவேரா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவை முதன்முதலில் பேட்டி எடுத்த இந்திய பத்திரிகையாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.