இந்தியா

மீன் லாரியில் அதிக பாரம்.. நிலைதடுமாறி நேர்ந்த விபத்தால் 4 பேர் பலி., 3 பேர் படுகாயம்.!

Summary:

மீன் லாரியில் அதிக பாரம்.. நிலைதடுமாறி நேர்ந்த விபத்தால் 4 பேர் பலி., 3 பேர் படுகாயம்.!

அதிகளவில் பாரம் ஏற்றி வந்த மீன் லாரி விபத்தில் சிக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டம், தடேபள்ளிகுடம் பகுதியில் மீன் லோடு ஏற்றி வந்த லாரி பயணம் செய்துகொண்டு இருந்தது. லாரியில் அளவுக்கு அதிகமாக மீன் லோடு ஏற்றி வரப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அதிக பாரத்துடன் வந்த லாரி, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தால், லாரியில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான நிலையில், 3 பேர் உயிருக்கு போராடி துடித்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் & மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு படுகாயமடைந்தார்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement