கணவனை தீர்த்துக்கட்ட கள்ளகாதலனுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த மனைவி.. நிர்வாணமாக பார்த்த கணவனுக்கு ஷாக்..!

கணவனை தீர்த்துக்கட்ட கள்ளகாதலனுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த மனைவி.. நிர்வாணமாக பார்த்த கணவனுக்கு ஷாக்..!


Andra Pradesh Affair Woman Killed his Husband

தனிமையில் இருந்த கள்ளக்காதல் ஜோடியை பார்த்த கணவன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ள பயங்கரம் நடந்துள்ளது.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டம், கோட்டா செருவு கிராமத்தில் வசித்து வருபவர் நாராயணன். பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கோமரோலு மண்டலத்தில் வசித்து வருபவர் தேவ பூஷணம். இவரின் மனைவி உட்டி சுனிதா. நாராயணனுக்கும் - சுனிதாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இதனையடுத்து, இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இருவரின் கள்ளக்காதல் விவகாரம் தேவ பூஷணத்திற்கு தெரியவந்துள்ளது. மேலும், கள்ளக்காதல் ஜோடி தனிமையில் உல்லாசமாக இருந்ததை தேவ பூஷணம் நேரில் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கள்ளக்காதல் ஜோடிகளை கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.

Andra Pradesh

இது கள்ளக்காதல் ஜோடிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, இருவரும் தேவ பூஷணை தீர்த்துக்கட்ட திட்டம்போட்டுள்ளனர். நாராயணன் தனது திட்டப்படி கள்ளகாதலியின் கணவனிடம் தவறு இழைக்கேன் என மன்னிப்பு கேட்க, இறுதியாக மது அருந்தலாம் என்றும் ஆசையாக மனமுருக பேசியுள்ளார். இதில் மயங்கிப்போன தேவ பூஷணத்துடன் நாராயணன் மது அருந்த சென்றுள்ளார். 

அங்கு, நாராயணன் கல்லை எடுத்து தேவ பூஷணை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் உடலை அங்கேயே விட்டுவந்த நிலையில், அடையாளம் தெரியாத பிணமாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணைக்கு பின்னர் நாராயணனை கைது செய்தனர். அவனின் வாக்குமூலத்தின் பேரில் சுனிதாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.