15 வயது சிறுவனை இழுத்து ஓடிய 30 வயது இளம்பெண்.. வீட்டுக்கு அழைத்துச்சென்று உல்லாசம்.. பதறவைக்கும் சம்பவம்.! 

15 வயது சிறுவனை இழுத்து ஓடிய 30 வயது இளம்பெண்.. வீட்டுக்கு அழைத்துச்சென்று உல்லாசம்.. பதறவைக்கும் சம்பவம்.! 


Andra Pradesh 30 Aged Girl Affair with 15 Aged Minor Boy

30 வயது இளம்பெண் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு 15 வயது சிறுவனை ஐதராபாத்துக்கு கடத்தி சென்று உல்லாசமாக இருந்த சம்பவம் நடந்துள்ளது. 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் 30 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு கணவர், 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதே தெருவில் 15 வயதுடைய சிறுவன் வசித்து வரும் நிலையில், அவர் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 19 ஆம் தேதி சிறுவன் நண்பனை சந்திக்கச்செல்வதாக கூறிவிட்டு சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை. 

இதனால் பதற்றமடைந்த பெற்றோர் சிறுவனின் நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கண்டறிய இயலவில்லை. இதற்குள்ளாக 30 வயது பெண்ணும் மாயமாகவே, சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இளம்பெண் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. 

பெண்ணின் செல்போன் எண்ணை டிரேஸ் செய்து சிறுவனை மீட்ட அதிகாரிகள், இளம்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவனை காம வலையில் வீழ்த்திய பெண்மணி உல்லாசத்திற்கு உபயோகம் செய்துள்ளார். இந்த விசயத்திற்கு பெண்ணின் கணவர், குழந்தைகள் இடையூறாக இருந்துள்ளனர். 

இதனால் சிறுவனிடம் ஆசைவார்த்தை கூறி ஐதராபாத்துக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களின் உல்லாச வாழ்க்கை 2 நாட்களை தொடுவதற்குள் காவல் துறையினர் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.