பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு கட்டையால் தர்ம அடி.. வெளுத்தெடுத்த சிங்கப்பெண்..!

பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு கட்டையால் தர்ம அடி.. வெளுத்தெடுத்த சிங்கப்பெண்..!


andhrapradesh-girl-attacked-boy-for-his-immature-behavi

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற இளைஞருக்கு, பெண் கட்டையால் தர்மஅடி கொடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா அருகாமையில் கண்ணவரம் விமான நிலையத்தில் பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், இவருக்கு பின்னே வாகனத்தில் வந்த ஒருவர் திடீரென பெண்ணின் வாகனத்தை மறித்துள்ளார். 

தொடர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை அளிக்க முயற்சி செய்துள்ளார்.இதனால் ஆவேசமடைந்த இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தை ஒரு பக்கமாக நிறுத்திவிட்டு, கீழே கிடந்த ஒரு கட்டையை எடுத்து பெண்ணென்றால் பொம்மையா என அவரை கட்டையாலே அடி பிளந்துள்ளார்.

Andhrapradesh

தொடர்ந்து அவருக்கு பாடம் இளம்பெண் பாடம் புகுத்திய நிலையில், அங்கிருந்தவர்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.