போதையின் உச்சம்..! போதைக்காக சானிடைசர் குடித்த 200 பேர்..! பரிதாபமாக பலியான உயிர்கள்..!



Andhra prathesh 200 persons drunk sanitizer

ஆந்திராவில் 200 பேர் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் மற்றும் குளிர்பானம் கலந்து குடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் குரிச்செடு கிராமத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டிற்கும் நிலையில் போதைக்கு அடிமையான சிலர் கிருமிநாசினியில் தண்ணீர் மற்றும் குளிர்பானம் கலந்து குடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையியல் கடப்பா மாவட்டத்தின் பெண்ட்லிமரி கிராமத்தை சேர்ந்த சுமார் 10 பேரும் சானிடைசரில் தண்ணீர் கலந்து குதித்துள்ளனர். இதேபோன்று அந்த பகுதியை சேர்ந்த 200 பேர்  சானிடைசரில் தண்ணீர் மற்றும் குளிர்பானம் கலந்து குடித்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Crime

இதில் ஏற்கனவே 16 பேர் உயிரிழந்த நிலையில், கடப்பா மாவட்டத்தின் பெண்ட்லிமரி கிராமத்தை சேர்ந்த 10 பேரில் தற்போது மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் கடப்பா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.