அடப்பாவமே.. 2 வயது பச்சிளம் குழந்தை வாளியில் வீழ்ந்து பரிதாப பலி.. பெற்றோர்களே கவனம்..!!andhra-pradesh-sathyasai-district-2-age-child-died

 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஶ்ரீசத்யசாய் மாவட்டம், சோண்டேபள்ளி பகுதியில் தண்ணீரில் விழுந்த இரண்டு வயது சிறுமி சரிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குழந்தையின் தாய் தனது வீட்டின் பின்புறத்தில் பெரிய அளவிலான வாளியில் துணிதுவைக்க தண்ணீர் வைத்திருந்தார். 

Andhra Pradesh

அப்போது வீட்டில் இருந்த மற்றொரு பணியை அவர் கவனித்துக் கொண்டிருந்த நிலையில், துணிதுவைக்கும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி வாளியில் விழுந்துள்ளது. இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.