பீர், விஸ்கி பாட்டிலில் சாய்பாபாவுக்கு தேன் அபிஷேகம் செய்த சோகம்; பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சி.!  Andhra Pradesh Godawari Saibaba Temple Honey Abiseka 

 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோதரவரி மாவட்டம், அச்சண்டவெமாவரம் கிராமத்தில் சாயிபாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் குரு பௌர்ணமியை முன்னிட்டு வழிபாடுகள் நடந்தது. 

இதற்கிடையில், கோவிலுக்கு வந்த சிலர் தாங்கள் பீர், விஸ்கி போன்ற பேமதுபுட்டியில் சேகரித்து இருந்த தேனை கொண்டு அபிஷேகம் செய்து சாயிபாபாவை வழிபட்டனர். இதனால் அங்கிருந்த பக்தர்கள் முதலில் மதுபானமோ என பதறிப்போயினர். 

Andhra Pradesh

பின்னர் அதில் இருப்பது தேன் என அறிந்து அமைதியாகினர். ஆனால், சிலர் அதனை வீடியோ எடுத்து சாயிபாபாவுக்கு மதுபாட்டிலில் தேன் கலந்து அபிஷேகம் செய்கிறார்கள் என வீடியோ எடுத்து பதிவிட, அது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.