தந்தையின் குடிப்பழக்கத்தால் கல்லூரி மாணவி தற்கொலை; கடிதத்தில் நெஞ்சை உலுக்கும் முக்கிய குறிப்பு.. அதிர்ச்சி பின்னணி.!



Andhra Pradesh 16 Aged Minor Girl Suicide due to Father Alcoholic Addiction 

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள படபட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனு (வயது 44). இவரின் மனைவி லட்சுமி (வயது 39). தம்பதிகளுக்கு 16 வயதுடைய மகள் இருக்கிறார். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வருகிறார். 

ஸ்ரீனு மதுபோதைக்கு அடிமையானவர் என தெரிகிறது. இதனால் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு, தான் சம்பாதித்த பணத்தை முழுவதும் குடிக்கு செலவிடுவது அவரின் வாடிக்கையான செயல்களில் ஒன்றாகியுள்ளது. 

மதுவை அருந்திவிட்டு வீட்டிற்கு வருபவர் தனது மனைவியிடம் எப்போதும் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது குழந்தையான 16 வயது சிறுமியும் தினமும் தனது தந்தையின் செயலை கண்டு வெதும்பி இருக்கிறார். 

சிறுமியின் தாய் வீட்டிலேயே வடை செய்து விற்பனை செய்து குடும்ப செலவுகளை கவனித்து வந்துள்ளார். தற்போது 16 வயது சிறுமி கல்லூரியில் படிக்கசேர்ந்த நிலையில், அவரின் குடும்பம் கடுமையான வறுமையை எதிர்கொண்டுள்ளது. 

அதேபோல், சிறுமியின் தந்தையும் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என தாயையும், மகளையும் குடிபோதையில் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் சிறுமி இருந்திருக்கிறார். 

இதற்கிடையில், கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு உபசரிப்பு விழாவில் கலந்துகொண்ட சிறுமி, அந்நிகழ்வு முடிந்ததும் தனது வீட்டிற்கு சென்று தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

அப்போது சிறுமி கைப்பட எழுதிய கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், "எனது உடல் உறுப்புகளை உடலுறுப்பு தானம் தேவைப்படுவோருக்கு வழங்குங்கள். அம்மா-அப்பா இனியாவது சண்டை இல்லாமல் நிம்மதியாக வாழுங்கள். எனது மரணம் தவிர்க்கப்பட இயலாத ஒன்று" என தெரிவித்துள்ளார்.