புதுசா போன் வாங்க போறிங்களா..? கொஞ்சம் பொறுங்க..! 40 % தள்ளுபடியுடன் வருகிறது அசத்தல் ஆபர்..!

இணையதள வர்த்தக உலகின் ஜாம்பவான்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இரண்டும் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது புது புது சலுகைகளை வழங்கிவருகிறது. அந்த வகையில், இந்த வருடத்திற்கான முதல் விற்பனை திருவிழாவை ஆரம்பித்துள்ளது அமேசான் நிறுவனம்.
வரும் ஜனவரி 19 ஆம் தேதி அமேசான் க்ரேட் இந்தியன் பெஸ்டிவல் தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விற்பனை திருவிழா ஜனவரி 22 ஆம் தேதி முடிவடைகிறது. அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 18 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கே விற்பனை தொடங்குகிறது.
இந்த முறை, தொலைபேசிகளுக்கு 40 % வரை தள்ளுபடி அறிவித்துள்ளது அமேசான். சாம்சங், ஜியோமி, ரியல்மி, ஓப்போ மற்றும் விவோ ஆகிய போன்களுக்கு அசத்தலான ஆஃபர்கள் காத்திருக்கின்றன. மேலும், SBI வங்கியின் க்ரெடிட் கார்ட் பயன்படுத்தினால் கூடுதலாக 10 % தள்ளுபடியும் கிடைக்கும்.
புதிதாக போன் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.