வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு; மக்களே உஷார்.!

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு; மக்களே உஷார்.!


all-india-bank-strick-in-decemper-26

வங்கிகள் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வருகிற 26 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த வியாழனன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் நாடு முழுவதிலும் உள்ள 3.20  லட்சம் வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதனால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் வருகின்ற 26ம் தேதி 9 அரசு மற்றும் தனியாா் வங்கிகளின் ஊழியா்களை கொண்ட சங்கங்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதுகுறித்து வங்கி ஊழியா்களின் ஐக்கிய கூட்டமைப்பு கூறுகையில், “வங்கிகள், வங்கி வாடிக்கையாளா்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகள் இணைப்பு முடிவு எடுக்கப்படவில்லை என்பதால் இது இருதரப்புக்கும் பாதிப்பையே தரும். 

அனைத்து வங்கிகளையும் இணைத்து மிகப்பெரிய வங்கியை உருவாக்க அரசு விரும்புகிறது. இதுபோல் அனைத்து பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைத்தாலும் உலகில் முதல் 10 இடத்துக்குள் அந்த வங்கியால் வரமுடியாது. வங்கிகள் இணைப்பைத் தொடா்ந்து அந்த வங்கிகளின் பல்வேறு கிளைகள் மூடப்படும்.

அவ்வாறு மூடப்பட்டால் வாடிக்கையாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள். எனவே வங்கி இணைப்பு திட்டத்தை கண்டித்து வருகின்ற 26ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.