இந்தியா

ஐஷ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

Summary:

Aishwarya Rai Bachchan daughter Aaradhya test positive for coronavirus

நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சனுக்கும், அவரது மகள் ஆராத்யா பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸால் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலலட்சம் பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் கொரோனாவின் தாக்கமும், பாதிப்பும் நாளும் நாள் அதிகரித்துவருகிறது. சாதாரண மக்கள் தொடங்கி, பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்த அவர் தனது குடும்பத்தார் மற்றும் எனது பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுக்கான சோதனை செய்யப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரது மகனும், பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஆனால் அமிதா பச்சனின் மருமகளும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகளுக்கும், அமிதா பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கும் கொரோனா இல்லை என கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ஐஷ்வர்யா ராய் பச்சனுக்கும், அவரது மகள் ஆராத்யா பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை என மஹாராஷ்ட்ர பொது சுகாதார அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார்.


Advertisement