இந்தியா

கொரோனா மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகளின் தற்போதைய நிலை என்ன.? மருத்துவமனை தகவல்.!

Summary:

Aishwarya and her daughter health condition update

கொரோனா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நடிகை ஐஸ்வஏய ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் இருவரும் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் தற்போது இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என அமிதாப் பச்சன் குடும்பத்தில் 4 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவரும் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளநிலையியல் ஐஸ்வர்யா ராய் அவரது மகள் ஆராத்யா இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்தனர்.

இந்நிலையில் நேற்று அவர்கள் இருவருக்கும் மூச்சு திணறல் அதிகமானதை அடுத்து இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டனர். தற்போது ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், இருவரும் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


Advertisement