சிறுவர்கள் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட பெரியவர்கள்...!! அதிர்ச்சி சம்பவம்..!!

சிறுவர்கள் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட பெரியவர்கள்...!! அதிர்ச்சி சம்பவம்..!!


Adults shot dead in children's fight...!!

உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் அருகே உள்ளது சேலம்பூர் கிராமம். இங்கு மெக்ராஜ் மற்றும் இக்பால் என்ற இருவரின் குடும்பங்கள் வசித்து வருகிறது. நேற்று முன்தினம் இவர்களது பிள்ளைகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகராரில் பெரியவர்களும் தங்களின் பிள்ளைகளுக்கு வக்காலத்து வாங்கி, தகராறில் ஈடுபட்டனர். இதில்  இருதரப்பினருக்கும் ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர், மெக்ராஜ் (35) என்பவர் பள்ளிவாசலுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதைத் தொடர்ந்து மெக்ராஜின் உறவினர்கள், இக்பாலின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி அப்ராஸை (45) துப்பாக்கியால் சுட்டனர். அவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து இரு தரப்பினரும் தலைமறைவாகி உள்ளனர். காவல்துறையினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.