இந்தியா சினிமா

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம்.. 2 வருடங்கள் ஆகியும் என்ன நடக்கிறது?..!

Summary:

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம்.. 2 வருடங்கள் ஆகியும் என்ன நடக்கிறது?..!

இந்தி படங்களில் இளம் நடிகராக வலம்வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரின் மரணத்தில் பல சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்ததாகவும் தகவல் பரவின. 

ஆனால், இதுகுறித்த குற்றசாட்டுகளை ஏற்றுக்கொள்ள மறுத்த அவரின் ரசிகர்கள், ஹிந்தி திரையுலக லாபியால் அவர் மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்ய தூண்டப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர். சுஷாந்தின் மரணம் தொடர்பாக மும்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சி.பி.ஐக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதனைத்தவிர்த்து அமலாக்கத்துறை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்த நிலையில், எந்த முன்னேற்றமும் தற்போது வரை தெரியவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் ட்விட்டர் பதிவில், "திறமைவாய்ந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலியை செலுத்துகிறேன். 

அவரின் மரணம் துரதஷ்டவசமானது. பீகார் மாநிலத்தில் மாநிலவன தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக அரசால் அது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மகா விகாஸ் அகாடியின் அரசை இழிவுபடுத்த மலிவான அரசியல் நடந்துள்ளது. 

சி.பி.ஐ வழக்கை கையில் எடுத்து 534 நாட்கள் ஆகியுள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை தற்கொலை என சான்றளித்து 474 ஆகியும் வழக்கு இழுத்தடிக்கப்பட்டுள்ளது. இதனால் சி.பி.ஐ விசாரணை என்பது ஏமாற்று நாடகமாகவும், அவமானமாகவும் சுஷாந்த் சிங் ராஜ்புத் விஷயத்தில் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.


Advertisement