இந்தியா

மகள்களை ஏரில் பூட்டிய ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் பரிசு - ஒரே நாளில் நடிகர் சோனு சூத் அசத்தல்!

ஆந்திராவில் போதிய வருமானம் இல்லாததால் பெற்ற மகள்களை கொண்டு ஏர்-பூட்டி உழுத விவசாயிக்கு பாலிவுட் நடிகர் சோனு சூத் டிராக்டர் ஒன்றினை அன்பளிப்பாக அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி என்ற கிராமத்தில் நாகேஸ்வரராவ் என்பவர் தனது குடுப்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. 

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு காரணமாக அவருடைய இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னதாக அவர் தனது நிலத்தில் தக்காளி பயிரிடுவதாக முடிவு செய்தார்.

ஆனால் இந்த சூழலில் மாடுகள் வாங்க வசதியில்லாத அவர் தனது இரண்டு மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் மனதை உருக வைத்தது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சொனு சூத் அந்த வீடியோவை பார்த்துவிட்டு அவர்களுக்கு காளை மாடுகள் வாங்கி தருவதாக முதலில் தெரிவித்தார். பின்னர் அவர்களுக்கு ஒரு டிராக்டரே வாங்கி தரப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மதியம் பதிவிட்டார்.

தான் கூறியது போன்றே சற்றும் தாமதிக்காமல் இன்று மாலையே அந்த விவசாய குடும்பத்திற்கு புதிய டிராக்டர் ஒன்றினை சோனு சூத் அனுப்பிவைத்துள்ளார். இதனால் அந்த குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


Advertisement